இந்திய செய்திகள் : உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாப்பூர் மாவட்டம் ஹர்ஷர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தின் ராஜ்பார். இவர் சவூதியில் வேலை பார்க்க 2013ம் ஆண்டு கிளம்பிப் போயிருந்தார். அவருக்கு மனைவி ஷீலா, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு ராம்தின் மரணமடைந்தார். அவரது உடலை உத்திரப்பிரதேசத்திற்குக் கொண்டு வர முயற்சிகள் மந்த கதியில் இருந்து வந்தன. ஒருவழியாக சமீபத்தில் உடல் வந்து சேர்ந்தது. இதையடுத்து இங்குள்ள மருத்துவமனையில் அவரது உடலை மறு பிரதேப் பரிசோதனை நடத்தியபோது அவரது உடலில் பல முக்கிய உள்ளுறுப்புகள் இல்லாமல் இருந்தது கண்டு டாக்டர்களை அதிர்ச்சி அடைந்தனர்.அவர் மரணமடைவதற்கு முன்பு தனது மனைவியிடம் ஒரு முறை பேசியபோது தன்னை தனது உரிமையாளர் கொல்லப் போவதாக கூறி அழுதுள்ளார். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர், உறவினர்கள் கூறுகிறார்கள். தற்போது ராம்தின் உடலில் பல முக்கிய உள்ளுறுப்புகள் இல்லாததால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர், ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது. ராம்தின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகியவை இல்லை என்று கூறபப்டுகிறது. 

Post a Comment

 
Top