பெங்களூரு: மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு நகரிந் காடுகோடி என்ற பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வந்தவர் கவுதமி (18). இந்நிலையில் நேற்று இரவு மாணவி கவுதமியை பள்ளியில் வேலைபார்த்த ஊழியர் மகேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். அவரை காப்பாற்ற வந்த தோழி ஸ்ரீஷா மீதும் ஊழியர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த தோழி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடுகோடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஷை கைது செய்துள்ள நிலையில், கல்லூரி முதல்வர் பிரசாந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, சில மாணவிகள், மகேஷின் நடத்தை பற்றி புகார் கூறியும், முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, கல்லூரி தலைவர் சோம்சிங் நேற்று கைது செய்யப்பட்டார். அவரும், பிரசாந்த்தும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, குற்றவாளி, மகேஷுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Post a Comment

 
Top