பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது இணையப் பக்கசேவையை (desktop website services) மூடிவிட்டு முற்றிலும் மொபைல் வர்த்தகத் தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனமான மைந்த்ரா வருகிற மே 1ஆம் தேதி முதல் தனது இணையப் பக்க சேவையை மூடமுடிவு செய்துள்ளது. இதே பாணியைப் பிளிப்கார்ட் நிறுவனமும் பின் தொடர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து.இதுகுறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை தலைவரான மைக்கல் அதானி, இந்தாண்டு இறுதிக்குள் இணையப் பக்க சேவையை மூட பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொபைல் வாடிக்கையார்களைக் கவரவே இத்தகைய முடிவுகள் எடுக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெறும் 6 சதவீதமாகும், 18 மாத காலத்தில் இதன் அளவு சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

Read more about the topics: flipkart, myntra, ecommerce, website, mobile, பிளிப்கார்ட், ஈகாமர்ஸ், இணையதளம், மொபைல்


Post a Comment

 
Top