டெல்லி: சோனியா பற்றிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கின் விமர்சனத்துக்கு பதிலடியாக மற்றொரு ஸ்மிருதி இரானி "டி.வி.களில் இடுப்பை அசைத்து ஆடியவர்' என்ற தமது முந்தைய விமர்சனம் சரியே என பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம். பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜிவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்த பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது கிரிராஜ்சிங்குக்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை சில ஆண்டுகளுக்கு முன்பு தாம் விமர்சித்திருந்தது இப்போதும் சரிதான் என காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சஞ்சய் நிருபமும், அப்போது ராஜ்யசபா எம்.பியாக இருந்த தற்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சருமான ஸ்மிருதி இரானியும் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர். அதில் பேசிய சஞ்சய் நிருபம், நீங்க அரசியலுக்கு வந்தே 4 நாட்கள்தான் ஆகிறது.. அதற்குள்ள பெரிய அரசியல் வல்லுநர் மாதிரி பேசுறீங்க? அதற்கு முன்பு டிவிகளில் நீங்க டான்ஸ் ஆடிகிட்டுதான் இருந்தீங்க? இப்ப பெரிய ஆய்வாளர் மாதிரி பேசுறீங்க?" என்று ஸ்மிருதி இரானியை ஏகத்துக்கும் பேசினார். அத்துடன் ஸ்மிருதி இரானியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலாக, ரவுடித்தனமாக சஞ்சய் நிருபம் பேசுகிறார்.. என்று கூறிய கையோடு இருவரும் பரஸ்பரம் அவதூறு வழக்குகளை டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இன்று சஞ்சய் நிருபமிடம் செய்தியாளர்கள், இப்போது சோனியாவை விமர்சித்ததற்காக கோபப்படும் நீங்கள் அன்று ஸ்மிருதி இரானியை விமர்சித்தீர்களே? என்று கேட்டதற்கு "ஆமாம் நான் அன்று சொன்னது சரிதான்.. அவர் டி.வி. தொலைக்காட்சிகளில் இடுப்பை அசைத்து ஆடியவர்தான்... அதைத்தான் சொன்னேன்.. அதுசரியே.. அது ஒன்றும் அவதூறான வார்த்தை அல்ல" என்று கூறியிருக்கிறார். ராகுல் விரைவில் அரசியலுக்கு திரும்புவார்: சோனியா காந்தி கிரிராஜ்சிங் போன்ற குறுகிய மனப்பான்மையாளர்களின் கருத்துக்கு பதிலளிக்க முடியாது: சோனியா சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தான் காங். தலைவரானா என கூறியிருந்தார் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் 

Post a Comment

 
Top