லாகூர்: கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது... பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகியிருக்கும்

அஸார் அலி

அஸார் அலி மிக மிக குறைந்த அளவிலான போட்டிகளில் மட்டுமே ஆடியவர். மொத்தமே 14 போட்டிகளில்தான் ஆடியுள்ளார். இவர் இதுவரை எடுத்துள்ள மொத்த ரன்கள் வெறும் 452 மட்டுமே. பேட்டிங் சராசரியோ 41.09 சதவீதம் மட்டும்தான். ஆனால் இவர்தான் இனிமேல் பாகிஸ்தான் அணியை வழி நடத்தப் போகிறார்.

வலது கை பேட்ஸ்மேன் ஆன அஸார் அலி, கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய கேப்டனாகியுள்ளார். இந்த நியமனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யார் கான் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளார். கடந்த 2 வருடமாகவே அஸார் அலி, பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் இடம் பெற்றதில்லை. ஆனால் திடீரென இவரை கேப்டனாக்கியுள்ளது பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. உண்மையில் அனைவரும் சர்பிராஸ் அகமதுக்கே கேப்டன் பதவி கிடைக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்தான், அஸார் அலிக்கு சாதகமாக பேசியுள்ளார். இதனால்தான் அஸார் கேப்டனாகியுள்ளாராம். மிகக் குறைந்த போட்டிகளில் ஆடியிருந்தாலும் கூட அஸாருக்கு வயது 30 ஆகிறது. உலகக் கோப்பைப் போட்டிக்குக் கூட அவரைத் தேர்வு செய்யவில்லை. அவர் குறித்து ஷஹார்யார் கான் கூறுகையில், நல்ல கேப்டனாக அஸார் அலி விளங்குவார். நல்ல பேட்ஸ்மேன். தலைமைத்துவம் அவரிடம் மிகச் சிறப்பாக உள்ளது. முடிவெடுப்பதில் சிறந்தவர். சர்பிராஸ் அகமது, டெஸ்ட் மற்றும் டுவென்டி 20 அணிகளின் துணைக் கேப்டனாக இருப்பார் என்றார். தற்போது பாகிஸ்தான் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 அணிகளுக்குத் தனித் தனி கேப்டன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

 
Top