சென்னை: 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தான் டோணி தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று நம்மை எல்லாம் பெருமை அடைய வைத்தது. இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காரணம் ஃபார்மில் சொதப்பலாக இருக்கிறது என்று விமர்சனத்திற்கு உள்ளான டோணி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் ஆடிய ஆட்டத்தை பார்த்து வியக்காதவர்கள் இல்லை. கிரிக்கெட் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட இம்முறை இந்திய அணி ஆடிய அனைத்து ஆட்டத்தையும் ரசித்து பார்த்தனர். 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தான் இந்திய அணி இரண்டாவது முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்தது. டோணி அணி உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பையை தக்க வைக்க முடியவில்லை என்ற கவலை இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக ஆடி கௌரவமாகத் தான் தோற்றது என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். 


Post a Comment

 
Top