சிட்னி: ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்ற பிறகு டோணி கண் கலங்கிய போட்டோக்கள் வைரலாகியுள்ளன. உலக கோப்பையை வெல்ல தகுதியுடைய அணியாக கணிக்கப்பட்ட நடப்புச் சாம்பியன் இந்தியா, தொடர்ந்து ஏழு போட்டிகளிலும் வென்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. 


ஆனால், அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோற்றது. கேப்டன் டோணி கடைசிகட்டம்வரை நின்று போராடியும், வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு கம்பெனி கொடுக்கவில்லை. எனவே, 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்க வேண்டியதாயிற்று. இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியில், இரு அணிகளின் கேப்டன்கள் கருத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். டோணியின் கருத்தை கேட்க அழைத்தபோது, டோணியின் கண்கள் கலங்கியிருந்தன. இதை டிவியில் பார்த்த ரசிகர்களும், செல்போன்களில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாக சுற்றிவருகிறது. கூலான கேப்டன் என்று அழைக்கப்படும் டோணியே கல் கலங்கிவிட்டார் என்பதுதான், ரசிகர்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான, அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்றபோது, அந்த அணியின் மோர்க்கல், கேப்டன் டி வில்லியர்ஸ் போன்றோர் அழுததும் ரசிகர்களை மிகவும் பாதித்திருந்தது. சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ள கருத்து இது: "டி வில்லியர்ஸ் கண்கள் கலங்கியபோது, எங்கள் கண்களும் கலங்கின.. டோணியின் கண்கள் கலங்கியபோது, எங்கள் இதயமும் கலங்கியது".

Post a Comment

 
Top