சிட்னி: இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பவுன்சர் வீசிவிட்டு, சீண்டலில் ஈடுபட்டார், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க். 21வது ஓவரை ஸ்டார்க் வீசிய நிலையில், அவரது பந்தை, சுரேஷ் ரெய்னா எதிர்கொண்டார். சுரேஷ் ரெய்னா ஷாட் பிட்ச் பந்துகளில் திணறக் கூடியவர் என்ற பெயர் இருப்பதால், அவருக்கு பவுன்சரை வீசினார் ஸ்டார்க்.

Suresh raina


அந்த பந்தை குனிந்து அப்படியே கீப்பரிடம் போக விட்டார் ரெய்னா. உடனே, ரெய்னாவிடம் வந்த ஸ்டார், அவரிடம் நக்கலாக ஏதோ பேசினார். ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதில் ஆஸ்திரேலியர்கள் பெயர் பெற்றவர்கள் என்பதால், உடனடியாக நடுவர் குமார் தர்மசேனா, தலையிட்டு, ஸ்டார்க்கிற்கு எச்சரிக்கைவிடுத்தார். இருப்பினும், நடுவரிடமும் ஸ்டார்க் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், தர்மசேனா தலையை ஆட்டியவாறே, செய்தது தவறுதான் என்பது போல வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தார். எப்படியோ மஞ்சள் சட்டை பாய்ஸ் சேட்டையை, சிவப்பு சட்டை போட்ட அம்பயர் தடுத்தாரே என்று டோணியின் ப்ளூ பாய்ஸ் நிம்மதி அடைந்தனர்.

Post a Comment

 
Top