சபரிமலை ஐயப்பன் வரலாறு, வாழ்வியல், தத்துவம், செயலியல்.... முதலியவை பற்றிய சிறப்புக் குறிப்புக்கள்

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, எறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மேலும் தமிழ் மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது.சபரிமலை அய்யப்பன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

பூப்படையாத சிறுமிகளையும், மாதவிடாய் நின்ற பெண்களையும் மட்டுமே சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது.

மலைப் பாதைகள்
  •     எருமேலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை வழியாக 61 கிலோ மீட்டர் நடைபயணம்
  •     பம்பை ஆற்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் நடைபயணம்

பிரசாதம்
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பாக பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்படுகிறது.

நெய் அபிசேகம்
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் சுமந்து வரும் இருமுடியில் ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு அய்யப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படும். ‎சீவாத்மாவும் – பரமாத்மாவும் (சீவ - ஈஸ்வர) ஐக்கியத்தை குறிக்கும் தத்துவமாக கருதப்படுகிறது


Sabarimala is a Hindu pilgrimage centre located at the Periyar Tiger Reserve in the Western . The shrine at Sabarimala is an ancient temple of Ayyappan also known as sasta and Dharmasasta. Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. 

The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality. 


Post a Comment

 
Top