Ockhi Cyclone Kanyakumari,Destroyed kanyakumari Fisher mans and Formers Video.

நாகர்கோவில்: ஆழ்கடலில் இறந்த மீனவர்களின் உடல்கள் மிதப்பதாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மக்கள் கூறி வரும் நிலையில் இந்த விவகாரத்தை அரசு கவனிக்கிறதா. மக்களின் இந்த தகவல் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல்படையினர் தேடி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. கிட்டத்தட்ட 15 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து பதற்றத்திலேயே உள்ளனர் குமரி மாவட்ட மீனவ கிராம மக்கள். ஓகி புயலில் சிக்கி மாயமானவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கினர். அவர்களில் குமரி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இவர்களை தவிர குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் 463 பேர் என மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறி உள்ளது. இதனிடையே குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று இன்று வரை கரை திரும்பாமல் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை 480 என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் இது குறித்து கூறுகையில் : குமரி மாவட்டத்தில் இருந்து ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களில் 104 பேர் பலியாகி இருக்கலாம் என்று கருதுகிறோம். வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்புவார்கள். எனவே 23ம் தேதிக்குள்ளாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்புகின்றனரா என்பதை பார்த்தால் தான் முழுவிவரம் தெரிவும். ஒன்இந்தியா தமிழ்-ல் இருந்து இந்த நியூஸ் எடுத்து அனைவருக்கும் பகிரப்பட்டுள்ளது. Like : https://www.facebook.com/oneindiatamil


Cyclone Ockhi Kanyakumari: In kanyakumari more than 250 boats missing and indian Navy rescues over 60 fishermens.Now a days some areas get recoverd but they didn't get proper help from state and central governtments. Addressing crowds after meeting families of missing fishermen in Kanyakumari's Thoothur, Rahul Gandhi was quoted in a New Indian Express report as saying, "I wanted to come here earlier but there Gujarat election campaign delayed my visit. I apologise for not coming sooner. #CycloneOckhi lay centered 120 kms west-southwest of Kanyakumari, likely to move west-northwestwards towards Lakshadweep Islands; to intensify into severe storm by tomorrow morning with wind speed upto 120 kmph; Heavy rainfall warning for Lakshadweep, South Kerala & Tamilnadu.


Post a Comment

 
Top